/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்படும் நீதிமன்றங்கள்' 'தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்படும் நீதிமன்றங்கள்'
'தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்படும் நீதிமன்றங்கள்'
'தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்படும் நீதிமன்றங்கள்'
'தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்படும் நீதிமன்றங்கள்'
ADDED : ஜூலை 28, 2024 03:39 AM
சங்ககிரி: ''இந்தியாவில் நீதிமன்றங்கள் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற-படி மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன,'' என, முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.
சேலம் மாவட்டம் சங்கிகிரியில், மூத்த வக்கீல் ரங்கசாமி வைர விழா நேற்று நடந்தது. சங்ககிரி, இடைப்பாடி வக்கீல் சங்கங்கள் சார்பில் நடந்த விழாவில், முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: இந்தியாவில் நீதிமன்றங்கள் நவீன தொழில்நுட்-பத்துக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. தினசரி வழக்குகளை, வக்கீல்கள், மொபைல் போனில் தெரிந்துகொள்-ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை தற்போது மேலும் தரம் உயர்த்தப்பட்டு நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதங்களை எடுத்துரைப்பது, நீதி-பதிகள் கேட்பது குறித்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இளம் வக்கீல்கள், புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதற்கு பதில் இணையதளத்திலேயே நீதிமன்ற தீர்ப்புகள் பதிவேற்றப்பட்-டுள்ளன. அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி(பொ) கிருஷ்ணகுமார் பேசுகையில், ''இளம் வக்கீல்கள், மூத்த வக்கீல்களிடம் அனு-பவம், தொழிலை சிறந்த முறையில் கற்க வேண்டும். வக்கீல்கள் கடினமாக உழைத்து தொழிலை உண்மையாக மேற்கொள்ள வேண்டும். தொழிலுக்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடு-வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.
இதில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணம்மாள், பதிவாளர் ஜோதிராமன்(பொது), சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன், சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்-றனர்.