கால்நடை கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
கால்நடை கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
கால்நடை கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
ADDED : ஜூலை 28, 2024 03:37 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே வி.கூட்ரோட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில், 'இளந்தளிர் 24' தலைப்பில் தமிழ் மன்ற தொடக்க விழா நேற்று நடந்தது. கல்-லுாரி முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார். மன்ற அமைப்-பாளர் காவேரி, தமிழ் மன்ற செயல்பாடு குறித்து அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை கணக்காய்வு தலைவர் ஆனந்த், தமிழ் மொழி பெருமை, சங்க கால தமிழ் குறித்து பேசினார். தொடர்ந்து புத்தகம் வாசிப்பது, தமிழ் மொழி நுால்களின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மடிக்கணினி திருட்டு
சேலம், ஜூலை 28-
சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரன், 30. இவர் பெங்களூர் செல்வதற்கு, சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு கடந்த, 2ல் வந்தார். பஸ்சில் ஏறிய அவர், மடிக்கணினி, வாட்ச் உள்-ளிட்ட பொருட்கள் அடங்கிய பேக்கை, பொருட்கள் வைக்கும் இடத்தில் வைத்தார். பஸ் புறப்படும்போது, பேக்கை காண-வில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி பள்ளப்-பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.