/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏட்டு உள்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு ஏட்டு உள்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு
ஏட்டு உள்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு
ஏட்டு உள்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு
ஏட்டு உள்பட 3 பேரின் பைக்குகள் திருட்டு
ADDED : ஜூலை 28, 2024 03:37 AM
சேலம்: சேலம் மாநகர தெற்கு போக்குவரத்து பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் ராஜா, 44. சேலம், லைன்மேட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.
கடந்த, 24ல் பணியில் இருந்த அவர், 'ஹீரோ ேஹாண்டா' பைக்கை, கோட்டை மாரியம்மன் கோவில் அருகே ஜவுளிக்கடை முன் நிறுத்திருந்தார். பணி முடித்துவிட்டு வந்தபோது, பைக்கை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் கருமந்துறை, மேல்வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35. இவரது மனைவி சேலம் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க, கடந்த, 25ல், ராமச்சந்திரன், 'ஹீரோ டீலக்ஸ்' பைக்கில் மருத்துவமனைக்கு வந்தார்.
மனைவியை பார்த்து திரும்பியபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் புகார்படி, மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் புத்து மாரியம்மன் கோவில், ஸ்ரீராம் நகரை சேர்ந்த சந்திரசேகரன், 76, கடந்த, 5ல், சேலம், 4 ரோட்டில் நிறுத்தியிருந்த, 'ஜூபிடர்' மொபட் மாயமானது. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடியவர் கைது
இடைப்பாடி, ஆலச்சம்பாளையத்தில் மோலானி முனியப்பன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி இரவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அதை பார்க்க, 'ஸ்பிளண்டர் புரோ' பைக்கில், ஆலச்சம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கவேல், 31, வந்தார். நிகழ்ச்சி முடிந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அதேபோல் அதே பகுதியை சேர்ந்த தாமரைசெல்வனின் ஸ்பிளண்டர் புரோ பைக்கும் காணவில்லை. உடனே இருவரும் தேடியபோது, இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் பைக்குகள் இருந்தன. அங்கு பைக்கை கொண்டு வந்தது யார் என, 'சிசிடிவி' கேமராவில் பார்த்-தபோது, அருகே உள்ள பானிபூரி கடையில் இருந்தவர் திருடியது தெரிந்தது. அவரை பிடித்து இடைப்பாடி போலீசாரிடம் ஒப்ப-டைத்தனர்.
விசாரணையில் திருப்பத்துார், ராஜமங்கலத்தை சேர்ந்த ரகு, 21, என தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.