/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அஸ்தம்பட்டி மண்டலத்தில் மேயர், கமிஷனர் ஆய்வு அஸ்தம்பட்டி மண்டலத்தில் மேயர், கமிஷனர் ஆய்வு
அஸ்தம்பட்டி மண்டலத்தில் மேயர், கமிஷனர் ஆய்வு
அஸ்தம்பட்டி மண்டலத்தில் மேயர், கமிஷனர் ஆய்வு
அஸ்தம்பட்டி மண்டலத்தில் மேயர், கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூன் 09, 2024 04:11 AM
சேலம்: சேலம் அஸ்தம்பட்டி மண்டல பகுதிகளில், நேற்று மேயர் ராமச்சந்திரன் ஆய்வு நடத்தினார்.
லோக்சபா தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், அரசு அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் வழக்கமான பணிகள் தொடங்கியுள்ளன. சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் நடைபெற்று வரும் பணிகளை, நேற்று மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் பாலச்சந்தர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
'உங்கள் பகுதியில் முதல்வன்' திட்டத்தின் கீழ், ரூ.8 கோடி மதிப்பில் பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் முதல், புது பஸ் ஸ்டாண்டு வரை, 1,600 மீட்டர் நீளத்துக்கு, 3 மீட்டர் அகலத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை ஆய்வு செய்த மேயர், பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார். பிருந்தாவன சாலையில் நடந்து வரும், பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.