/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது போதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து மது போதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து
மது போதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து
மது போதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து
மது போதையில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூன் 09, 2024 04:12 AM
வீரபாண்டி: மது போதையில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
ஆட்டையாம்பட்டி அருகே, கண்டர்குலமாணிக்கத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் வெங்கடேஷ், 24, விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கவுதம், 26. இருவரும் நேற்று முன்தினம் இரவு, கண்டர்குலமாணிக்கம் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி, அருகிலேயே குடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஆண்டிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ்குமார், 30, பிரபு, 42, மகுடஞ்சாவடி நந்தகுமார், 35, கோவிந்தராஜ், 42, ஆகியோரும் மது குடித்து கொண்டிருந்தனர். சில நாட்களுக்கு முன்பு, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் தகராறு முற்றி சந்தோஷ்குமார் தரப்பினர், வெங்கடேைஷ கத்தியால் குத்த முயன்ற போது, தடுக்க வந்த கவுதம் கழுத்தில் குத்துபட்டது.
ரத்தம் கொட்டிய நிலையில், ஆட்டையாம்பட்டி தனியார் மருத்துவமனையில் கவுதம் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெங்கடேஷ் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் நந்தகுமார், கோவிந்தராஜ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
தலைமறைவான சந்தோஷ்குமார், பிரபு ஆகியோரை தேடி வருகின்றனர்.