/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'நீட் - ஜெ.இ.இ., மெயின்ஸ்' தேர்வில் செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனை 'நீட் - ஜெ.இ.இ., மெயின்ஸ்' தேர்வில் செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனை
'நீட் - ஜெ.இ.இ., மெயின்ஸ்' தேர்வில் செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனை
'நீட் - ஜெ.இ.இ., மெயின்ஸ்' தேர்வில் செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனை
'நீட் - ஜெ.இ.இ., மெயின்ஸ்' தேர்வில் செந்தில் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : ஜூன் 07, 2024 02:07 AM
தர்மபுரி;தர்மபுரி, அதியமான்கோட்டை, செந்தில் பப்ளிக் பள்ளி மாணவர் குகன்சங்கர், 'நீட்' தேர்வை முதல் முறை எழுதிய நிலையில், 720க்கு, 705 மதிப்பெண் பெற்று இந்திய அளவில், 347வது இடம் பிடித்தார். அதேபோல் மாணவி பிபிஷா, 678 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் 4,052வது இடம், மாணவர் ஹரிஸ், 669 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில், 6,647வது இடம் பெற்றனர். அதேபோல் நடப்பாண்டு ஜெ.இ.இ., மெயின்ஸ் தேர்வை முதல் முறை எழுதிய மாணவர் விஷால், அகில இந்திய அளவில், 99.66 'பர்சன்டைல்' மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்த மாணவர்களை கவுரவிக்க, நேற்று முன்தினம் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. அதில் பள்ளி நிர்வாகம் சார்பில் விஷால், குகன்சங்கருக்கு தலா, 1.50 லட்சம் ரூபாய், பிபிஷாவுக்கு, 75,000, ஹரிஸூக்கு, 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. தொடர்ந்து செந்தில் குழும தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகர், தாளாளர் தீப்தி, நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனிவாசன், முதல்வர் செந்தில்முருகன், துணை முதல்வர் ராஜ்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஞானகவிதா, போட்டித்தேர்வு பயிற்சி வல்லுனர் சரவணன், ஆசிரியர்கள் ஆகியோர், மாணவர்களை பாராட்டினர்.