/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு
விபத்தில் காயம் அடைந்த முதியவர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 07, 2024 02:06 AM
ஏத்தாப்பூர்;வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையத்தை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராஜேந்திரன், 65.
இவர் கடந்த, 4ல், வாழப்பாடி நோக்கி, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' மொபட்டில் சென்றுகொண்டிருந்தார். பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த வைத்தியகவுண்டன்புதுார் அருகே சென்றபோது, ஈரோடு நோக்கி சென்ற, 'ஸ்கார்பியோ' கார், மொபட் மீது மோதியது. இதில் ராஜேந்திரன், காரில் வந்த ஜவஹர், அவரது குடும்பத்தினர் என, 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன், நேற்று முன்தினம் உயிர் இழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.