உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்
உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்
உப்பு படிந்த குடிநீர்: மக்கள் புகார்
ADDED : ஜூலை 28, 2024 03:32 AM
ஆத்துார்: ஆத்துார் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. அதில், 1 முதல், 7 வரையான வார்டுகளுக்கு, முட்டல், அய்யனார் கோவில் ஏரி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து மேல்நிலை தொட்டியில் ஏற்-றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அந்த குடிநீரை, பாத்-திரத்தில் வைத்திருந்தால் உப்பு படிந்து விடுகிறது. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி, நேற்று, முல்லைவாடி மக்கள், ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் கூறு-கையில், ''குடிநீர் சுத்திகரித்து, உப்பு தவிர்க்க, 'குளோரினேஷன்' போட்டு வினியோகிக்கிறோம். அந்த வார்டுகளில் காவிரி குடிநீர் வழங்க, ஆத்துார் நகருக்கு, கூடுதலாக, 2 லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வினியோகிக்க, குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.