Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம், ஆத்துார், வாழப்பாடியில் சூறைக்காற்று, இடியுடன் மழை

சேலம், ஆத்துார், வாழப்பாடியில் சூறைக்காற்று, இடியுடன் மழை

சேலம், ஆத்துார், வாழப்பாடியில் சூறைக்காற்று, இடியுடன் மழை

சேலம், ஆத்துார், வாழப்பாடியில் சூறைக்காற்று, இடியுடன் மழை

ADDED : ஜூன் 02, 2024 07:29 AM


Google News
சேலம் : சேலம், ஆத்துார், வாழப்பாடி பகுதிகளில் நேற்று சூறைக்காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக மதியம் வெயில் தாக்கம் அதிகம் இருந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மாலையில் இருந்து புழுக்கத்தால் அவதிப்பட்டனர். ஆனால் இரவில் மாவட்டத்தின் சில இடங்களில் இடியுடன் சிறிது நேரம் மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக ஏற்காட்டில், 34.6 மி.மீ., மழை பதிவானது. சேலம், 11.2, டேனிஷ்பேட்டை, 7, ஓமலுார், 2.2 மி.மீ., மழை பெய்தது.

சேலத்தில் நேற்று மாலை, 4:00 மணிக்கு சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்தது. பழைய, புதிய பஸ் ஸ்டாண்டுகள், 4 ரோடு, அழகாபுரம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது. தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலர், மழையில் நனைந்தபடி சென்றனர். ஆங்காங்கே பாலத்தின் அடியில் பலர் தஞ்சம் புகுந்தனர். மேலும் குளிர்ந்த காற்றுடன் இதமான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

மழைநீருடன் கழிவுநீர்

வாழப்பாடியில் நேற்று மதியம், 3:00 மணிக்கு சூறைக்காற்று, இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. சந்தைப்பேட்டை குடியிருப்பு பகுதியில் போலீஸ் ஸ்டேஷன், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் முறையாக சாக்கடை கால்வாய் துார்வாரப்படவில்லை.

இதனால் மழையின்போது அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியது. வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷன் பஸ் ஸ்டாப் அருகே, சாலையோர கடைகளை, கழிவுநீர் கலந்த மழைநீர் சூழ்ந்ததால் வியாபாரிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.

வாழப்பாடி, அதன் சுற்றுவட்டார

பகுதிகளில் நேற்று மதியம், 3:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல் ஆத்துார், நரசிங்கபுரம், காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், மணிவிழுந்தான் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது.

மின்தடையால் அவதி

பனமரத்துப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்தது. தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. மழை நின்ற பின்னும் மின்தடை சரிசெய்யப்படவில்லை. மக்கள் துாக்கம் இழந்து கொசுக்கடியில் சிரமப்பட்டனர். மறுநாள் அதிகாலை, 4:00 மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மதியம், 3:00 மணிக்கு சாரல் மழை பெய்தபோதும், மின்வெட்டு ஏற்பட்டது. மாலை, 6:45 மணிக்கு மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. சாரல் மழை பெய்தாலும் கூட காந்தி நகர், கோம்பைக்காடு, ஏரி ரோடு, அடிக்கரை பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இதற்கு மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us