ஒன்றிய கூட்ட அரங்கில் பணி ஓய்வு விழா
ஒன்றிய கூட்ட அரங்கில் பணி ஓய்வு விழா
ஒன்றிய கூட்ட அரங்கில் பணி ஓய்வு விழா
ADDED : ஜூன் 02, 2024 07:29 AM
ஆத்துார் : ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில் ஆத்துார் ஒன்றிய அலுவலகம் உள்ளது. உதவி பொறியாளர் விஸ்வநாதன், ஒன்றிய குழு தலைவரின் கார் டிரைவர் காளிமுத்து, சத்துணவு அமைப்பாளர் நேரு ஆகியோர், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றனர்.
இவர்களுக்கு, ஆத்துார் ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடக்கும் அறையில் பணி ஓய்வு விழா நடத்தப்பட்டது. இதில் தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய குழு தலைவி பத்மினி பிரியதர்ஷினி, அவரது கணவரான, தி.மு.க., ஒன்றிய செயலர் செழியன், தி.மு.க., கவுன்சிலர்கள், நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். பி.டி.ஓ.,க்கள் பரமசிவம், வெங்கட்ராமணன் உள்ளிட்ட அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு, அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆளுங்கட்சியினர், நினைவு பரிசுகளாக நகை உள்ளிட்டவற்றை வழங்கினர். கூட்ட அரங்கின் மேடையில் ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய செயலர் ஆகியோரை அமரவைத்தும் மரியாதை செய்துள்ளனர். விழா முடிந்ததும் அசைவ, சைவ உணவு விருந்துகளும் அதே அறையில் வழங்கப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலையொட்டி வரும், 4 வரை, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் பயன்படுத்தும் ஒன்றிய குழு தலைவர் அறை, கவுன்சிலர் கூட்ட அரங்கு மூடி 'சீல்' வைத்திருக்க வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் உத்தரவு. ஆனால் ஆத்துாரில் புதிதாக திறக்கப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்ட அரங்குக்கு, 'சீல்' வைக்காததோடு, இந்த அறையை விதிமீறி பயன்படுத்தி, விழா நடத்திய தகவல் குறித்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.