/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சங்ககிரி உள்பட 8 வட்டாரத்தில் பசுந்தாள் பயிர் விதைகள் விற்பனை சங்ககிரி உள்பட 8 வட்டாரத்தில் பசுந்தாள் பயிர் விதைகள் விற்பனை
சங்ககிரி உள்பட 8 வட்டாரத்தில் பசுந்தாள் பயிர் விதைகள் விற்பனை
சங்ககிரி உள்பட 8 வட்டாரத்தில் பசுந்தாள் பயிர் விதைகள் விற்பனை
சங்ககிரி உள்பட 8 வட்டாரத்தில் பசுந்தாள் பயிர் விதைகள் விற்பனை
ADDED : ஜூன் 30, 2024 04:02 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர பயிர்களின் விதை விற்பனை செய்யப்படுகிறது. நஞ்சற்ற உணவு உற்பத்திக்கு மண் வளத்தை பாதுகாக்க, நீர்பாசன பகுதிகளில், 3,000 ஏக்கர் இலக்குடன், 3,000 விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் ஒரு கிலோ, 99 ரூபாய், 50 காசுக்கு பதில், 50 சதவீத மானியத்தில் பெறலாம்.
விதைத்த, 35 முதல், 45 நாட்கள் வரை அல்லது 50 சதவீதம் பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்தால் மண்ணில் உள்ள கண்ணுக்கு புலப்படாத பல கோடி நுண்ணுயிர்களால் தாக்கப்பட்டு பசுந்தாள் உர பயிர்களில் உள்ள பேரூட்டம், நுண்ணுாட்ட சத்துகள் வெளியாகி, பயிர்கள் செழித்து வளரும். விவசாயிகள், குத்தகைதாரர்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்றவர்.
பசுந்தாள் உர விதை விற்பனை செய்ய வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, இடைப்பாடி, சங்ககிரி, கொளத்துார் ஆகிய வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒருவருக்கு அதிகபட்சம், ஒரு ஏக்கருக்கு, 20 கிலோ விதைகள் வழங்கப்படும். இதற்கு உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும். வட்டார வேளாண் விரிவாக்க மையம், துணை வேளாண் விரிவாக்க மையங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தவிர, 94433-83304 என்ற எண்ணிலும் பேசலாம் என, சேலம் வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.