/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.100 கோடி மோசடி வழக்கு நகைக்கடைகளை திறந்து சோதனை ரூ.100 கோடி மோசடி வழக்கு நகைக்கடைகளை திறந்து சோதனை
ரூ.100 கோடி மோசடி வழக்கு நகைக்கடைகளை திறந்து சோதனை
ரூ.100 கோடி மோசடி வழக்கு நகைக்கடைகளை திறந்து சோதனை
ரூ.100 கோடி மோசடி வழக்கு நகைக்கடைகளை திறந்து சோதனை
ADDED : ஜூன் 27, 2024 02:40 AM
சேலம்:சேலம், வீராணம், வலசையூரை சேர்ந்தவர் சபரிசங்கர் 35. சேலம், தர்மபுரி, நாமக்கல், ஆத்துார், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ்., நகை கடை நடத்தி வந்தார்.
கவர்ச்சி திட்டங்களை அறிவித்ததால் ஏராளமானோர் முதலீடு செய்தனர். சில மாதங்களுக்கு முன், 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு, சபரிசங்கர் தப்பிவிட்டார். அவரை சமீபத்தில், தர்மபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், புதுச்சேரியில் கைது செய்தனர். தொடர்ந்து சபரிசங்கரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நேற்று அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்துார், தாரமங்கலம் ஆகிய இடங்களில் இருந்த எஸ்.வி.எஸ்., நகை கடைகளை திறந்து போலீசார் சோதனை செய்தனர். மேலும் இந்த மோசடியால் ஆதாயம் அடைந்த கடை மேலாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.