/உள்ளூர் செய்திகள்/சேலம்/ திருடிய தொழிலாளிக்கு 'காப்பு': ரூ.2.90 லட்சம், 5 பவுன் மீட்பு திருடிய தொழிலாளிக்கு 'காப்பு': ரூ.2.90 லட்சம், 5 பவுன் மீட்பு
திருடிய தொழிலாளிக்கு 'காப்பு': ரூ.2.90 லட்சம், 5 பவுன் மீட்பு
திருடிய தொழிலாளிக்கு 'காப்பு': ரூ.2.90 லட்சம், 5 பவுன் மீட்பு
திருடிய தொழிலாளிக்கு 'காப்பு': ரூ.2.90 லட்சம், 5 பவுன் மீட்பு
ADDED : ஜூலை 20, 2024 09:30 AM
சேலம்: சேலம் நெத்திமேடு, ஆண்டிகவுண்டர்காட்டை சேர்ந்தவர் மணி, 67. இவரது வீட்டில் வசிப்பவர் மோகன்தாஸ், 44. கேரளாவில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி ஷர்மிளா, 34. கடந்த மே, 29ல் மணி வீட்டின் பீரோவில் இருந்த, 10 லட்சம் ரூபாய் திருடுபோனது.
புகார் படி அன்னதானப்பட்டி போலீசார், அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில் துப்பு துலங்கியது. அதில் வீட்டில் குடியிருந்து வரும் மோகன்தாைஸ் என தெரிந்து, ஒன்றரை மாதங்களுக்கு பின் நேற்று கைது செய்தனர்.
விசாரணையில் அவர், திருடிய பணத்தில், 5 பவுன் நகை வாங்கியதாக ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலப்படி, 5 பவுன், அவர் செலவு செய்தது போக, மீதி, 2.90 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.