/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பண்ணை வீட்டில் திருடிய இருவருக்கு 'காப்பு' பண்ணை வீட்டில் திருடிய இருவருக்கு 'காப்பு'
பண்ணை வீட்டில் திருடிய இருவருக்கு 'காப்பு'
பண்ணை வீட்டில் திருடிய இருவருக்கு 'காப்பு'
பண்ணை வீட்டில் திருடிய இருவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 19, 2024 02:40 AM
தாரமங்கலம், சேலம் செவ்வாபேட்டையை சேர்ந்தவர் சுரேஷ், 44, வெள்ளி வியாபாரி. இவருக்கு தாரமங்கலம் அருகே மாட்டையாம்பட்டியில் பண்ணை வீட்டுடன், 20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நிலத்தை அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை, மடத்துாரை சேர்ந்த ரவி என்பவருக்கும் தலா, 8 ஏக்கர் குத்தகைக்கு விட்டிருந்தார். சுரேஷ் குடும்பத்துடன், அவ்வப்போது பண்ணை வீட்டில் தங்கி வந்துள்ளார். பண்ணை வீட்டை அண்ணாமலை பராமரித்து வந்தார்.
இந்தநிலையில் கடந் மே, 6ல் அண்ணாமலை வீட்டை சுத்தம் செய்ய சென்றபோது, வீட்டில் இருந்த 'டிவி', பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருந்தது. 80 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சிவதாபுரத்தை சேர்ந்த நந்தகுமார், 28, மாது, 57, திருடியிருக்கலாம் என தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.