/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேரடியில் தார்ச்சாலை கேட்டு பஸ்சை சிறைபிடித்த மக்கள் சேரடியில் தார்ச்சாலை கேட்டு பஸ்சை சிறைபிடித்த மக்கள்
சேரடியில் தார்ச்சாலை கேட்டு பஸ்சை சிறைபிடித்த மக்கள்
சேரடியில் தார்ச்சாலை கேட்டு பஸ்சை சிறைபிடித்த மக்கள்
சேரடியில் தார்ச்சாலை கேட்டு பஸ்சை சிறைபிடித்த மக்கள்
ADDED : ஜூன் 07, 2024 02:16 AM
கெங்கவல்லி;தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி பகுதி, சேலம் மாவட்ட எல்லையான சேரடி மலைப்பகுதி, நாமக்கல் மாவட்ட எல்லை தொடங்கும் இணைப்பு பகுதியாக உள்ளது. இந்த மலையேற்ற பகுதியில், 200 மீ.,க்கு மண் சாலை உள்ளது. ஆனால் குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த வழியே நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு செல்வோருக்கு சிரமமாக உள்ளது. தவிர கார், பைக் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் செல்கின்றனர்.
தம்மம்பட்டியில் இருந்து சேரடி வழியே கொல்லிமலைக்கு தினமும் ஒரு அரசு பஸ் சென்று வருகிறது. அந்த பஸ்சை நேற்று சிறைபிடித்த மக்கள், மாவட்ட எல்லையில், 200 மீ.,க்கு தார்ச்சாலை அமைக்கக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வராததால் சிறிது நேரத்தில் பஸ்சை விடுவித்து கலைந்து சென்றனர்.