/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜூன் 07, 2024 02:17 AM
ஆத்துார்;ஆத்துார் நகராட்சி, 5வது வார்டில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள், பட்டா கேட்டு, 2 மாதங்களுக்கு முன் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் நேற்று, தி.மு.க., கவுன்சிலர் தங்கவேல் தலைமையில் மக்கள், ஆத்துார் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தாசில்தார் பாலாஜி, ஜீப்பில் வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்த மக்கள், அவரது வாகனத்தை வழிமறித்து, பட்டா குறித்து கேள்வி எழுப்பினர்.
தாசில்தார், 'தேர்தல் பணி முடிந்துள்ளதால் மனுக்கள் மீது விசாரித்து தீர்வு காணப்படும்' என்றார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து ஆத்துார் நகராட்சி அலுவலகத்துக்கு சென்ற மக்கள், குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளித்தனர்.