/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மருளையம்பாளையம் ஸ்டாப்பில் நிறுத்தக்கோரி 3 பஸ்களை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல் மருளையம்பாளையம் ஸ்டாப்பில் நிறுத்தக்கோரி 3 பஸ்களை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்
மருளையம்பாளையம் ஸ்டாப்பில் நிறுத்தக்கோரி 3 பஸ்களை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்
மருளையம்பாளையம் ஸ்டாப்பில் நிறுத்தக்கோரி 3 பஸ்களை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்
மருளையம்பாளையம் ஸ்டாப்பில் நிறுத்தக்கோரி 3 பஸ்களை சிறைபிடித்து மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 10, 2024 01:24 AM
வீரபாண்டி: மருளையம்பாளையம் ஸ்டாப்பில் பஸ் நிறுத்தக்கோரி, 3 பஸ்களை சிறைபிடித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆட்டையாம்பட்டி அருகே திருச்செங்கோடு பிரதான சாலையில் மருளையம்பாளையம் பஸ் ஸ்டாப் உள்ளது. சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, அப்பகுதி மக்கள் தினமும் வேலைக்கு சேலம், திருச்செங்கோடு சென்று வருகின்றனர். சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டுக்கும் அங்கிருந்து சேலத்துக்கும் வரும் அரசு, தனியார் பஸ்கள் மருளையம்பாளையம் ஸ்டாப்பில் நிறுத்தி பயணியரை ஏற்றி இறக்குவது இல்லை. மாறாக, ஆட்டையாம்பட்டி அல்லது காளிப்பட்டியில் இறக்கி விட்டு அங்கிருந்து நடந்து வரும் நிலை ஏற்படுகிறது.
இதை கண்டித்து நேற்று மாலை, 6:00 மணிக்கு, அப்பகுதி மக்கள் இணைந்து திருச்செங்கோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த, 3 தனியார் பஸ்களை சிறைபிடித்தனர். தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிக்கப்பட்டு, திருச்செங்கோடு பிரதான சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, நெரிசல் ஏற்பட்டது. ஆட்டையாம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், மக்கள் மறியலை கைவிட்டனர்.