/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுவன் பைக் ஓட்டி விபத்து தந்தை உள்பட 2 பேர் கைது சிறுவன் பைக் ஓட்டி விபத்து தந்தை உள்பட 2 பேர் கைது
சிறுவன் பைக் ஓட்டி விபத்து தந்தை உள்பட 2 பேர் கைது
சிறுவன் பைக் ஓட்டி விபத்து தந்தை உள்பட 2 பேர் கைது
சிறுவன் பைக் ஓட்டி விபத்து தந்தை உள்பட 2 பேர் கைது
ADDED : ஜூன் 10, 2024 01:24 AM
சேலம்: சேலம், அம்மாபேட்டை, எஸ்.கே., டவுன்ஷிப் பிரிவு சாலையை சேர்ந்த குமார் மகன் பரணிதரன், 16. இவன் எதிர் வீட்டில் வசிக்கும் குணசேகரனுக்கு சொந்தமான, 'யமஹா' பைக்கை எடுத்துச்சென்று அஜாக்கிரதையாக ஓட்டியதில் காமராஜர் நகர் காலனியை சேர்ந்த அங்கப்பன் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் இருவரும் காயம் அடைந்தனர். அம்மாபேட்டை போலீசார், சிறுவன், அவரது தந்தை, பைக் உரிமையாளர் மீது வழக்குப்பதிந்தனர்.
தொடர்ந்து குமார், குணசேகரனை கைது செய்தனர். சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால், அவர்கள் மீதும், அவர்களை ஓட்ட அனுமதித்தவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி எச்சரித்துள்ளார்.