/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் ெஹலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிப்பு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் ெஹலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிப்பு
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் ெஹலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிப்பு
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் ெஹலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிப்பு
மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் ெஹலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிப்பு
ADDED : ஜூன் 13, 2024 06:46 AM
மேட்டூர் : மேட்டூர், கோனுார் ஊராட்சி கந்தனுார் சின்னமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு நடந்தது. 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள், மகா கும்பாபி ேஷகம் நடந்தது.
இதற்கு பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட ெஹலிகாப்டர், அருகே உள்ள குள்ளமுடையானுார் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட்டது. பின் அதில் மலர்கள், புனிதநீர் ஏற்றி, கோவில் மீது பறந்து சென்று கும்பாபி ேஷகத்தில் பங்கேற்ற பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர். தொடர்ந்து மண்டல பூஜை நடக்கிறது.
பத்ரகாளியம்மன் கோவில்
சேலம் மாவட்டம் வீரபாண்டியில் விநாயகர், பத்ரகாளியம்மன், கருப்பண்ணார், சப்த கன்னிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அதன் கும்பாபிேஷக விழாவையொட்டி, நேற்று காலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து அதில் வைக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க, தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். 7:00 மணிக்கு திரண்டிருந்த பக்தர்களின், 'ஓம்சக்தி பராசக்தி' கோஷம் முழங்க, விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபி ேஷகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து மூலவர் பத்ரகாளியம்மன், விநாயகர், கருப்பண்ணார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனிதநீரால் அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.