Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்

அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்

அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்

அரளி உற்பத்தி அதிகரிப்பு விலை சரிவால் நஷ்டம்

ADDED : ஜூன் 10, 2024 01:58 AM


Google News
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில், 5 வகை அரளி நடவு செய்யப்படுகின்றன. தினமும் அறுவடை செய்யப்படும் அரளி, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

சமீபத்தில் பெய்த மழையால் அரளி உற்பத்தி அதிகரித்து விலை சரிந்துள்ளது. சேலத்தில், 1 கிலோ சாதா அரளி கடந்த, 4, 5ல், 60 ரூபாய்க்கு விற்றது. 6ல், 50 ரூபாய்; 7ல், 20 ரூபாயாக சரிந்தது. கடந்த இரு நாட்களாக, 30 ரூபாய்க்கு விற்பனையானது.

இதுகுறித்து அரளி விவசாயிகள் கூறுகையில், 'மழையால் காய்ந்த செடிகள் துளிர் விட்டு வளர்ந்து மகசூல் தந்துள்ளது. 1 கிலோ அரளி பறிக்க கூலி, 50 ரூபாய் ஆகிறது. அதை விட குறைவாக விலை கிடைப்பதால் கிலோவுக்கு, 20 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பூ பறிக்காமல் செடியிலேயே விடுகிறோம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us