/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊழியரை தாக்கி பைக் பறித்த நான்கு பேர் கைது ஊழியரை தாக்கி பைக் பறித்த நான்கு பேர் கைது
ஊழியரை தாக்கி பைக் பறித்த நான்கு பேர் கைது
ஊழியரை தாக்கி பைக் பறித்த நான்கு பேர் கைது
ஊழியரை தாக்கி பைக் பறித்த நான்கு பேர் கைது
ADDED : ஜூலை 30, 2024 02:54 AM
சேலம்: சூரமங்கலம் பூனை கரட்டை சேர்ந்தவர் அசோக்குமார், 34, ஐ.டி.ஐ., ஊழியரான இவர் கிச்சிபாளையம் ஆறுமுகம் நகரில் உள்ள, சித்தப்பாவை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் ேஹாண்டா டியோ ஸ்கூட்டரில் வந்தார். அப்போது அவரது வாகனம் பழுது ஏற்பட்டு நின்று விட்டதால், தள்ளிக்கொண்டு வந்தார். அவ்வழியாக வந்த நான்கு பேர், அவரை வழிமறைத்து தகராறு செய்து, அசோக்குமாரை தாக்கி விட்டு ஸ்கூட்டரை பறித்து சென்றனர். கிச்சிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி, பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சபரிநாதன், 20, லட்சுமி நாராயணன், 19, அசோக் என்ற பச்சைக்கிளி, 19, ராஜசேகர், 21, ஆகிய நான்கு பேரை கைது செய்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்