/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீரபாண்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு வீரபாண்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
வீரபாண்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
வீரபாண்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
வீரபாண்டி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : ஜூலை 29, 2024 01:08 AM
வீரபாண்டி: ஆக., 16க்குள், காரீப் பருவ பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வீரபாண்டி வட்டார வேளாண் துறை உதவி இயக்-குனர் கார்த்திகாயினி அறிக்கை:
எதிர்பாரத இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க, நிலையான வருமானம் கிடைக்க, பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீர-பாண்டி வட்டாரத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள, 'காரீப்' பருவ பயிர்களான சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு ஆக., 16க்குள், சோளம் ஏக்கருக்கு, 194 ரூபாய், நிலக்கடலை ஏக்க-ருக்கு, 421 ரூபாய் பிரீமிய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதற்கு அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வங்கிகள், வணிக வங்கிகள், இ-சேவை மையங்களில் நில உரிமை பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, சேமிப்பு கணக்கு வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகலுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதன்மூலம் இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்கலாம்.