/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நம்மாழ்வார் விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 29, 2024 01:07 AM
சேலம்: சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை:
நடப்பு 2024 - 25ல், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உயிர்ம வேளாண்மையை சிறப்பாக செய்வதோடு அதை பிற விவசாயிகளுக்கு ஊக்கப்படுத்தும் விவசாயிகளுக்கு, சிறந்த உயிர்ம வேளாண் விவசாயிகளுக்கான நம்மாழ்வார் விருது, மாநில அளவில், 3 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில், முதல் மூன்று இடங்கள் முறையே, 2.50 லட்சம் ரூபாய், 1.50 லட்சம், 1 லட்சம் ரூபாயுடன் பதக்கத்தை, தமிழக அரசு வழங்குகிறது.
விருது பெற விரும்பும் விவசாயிகளின் தகுதியாக, குறைந்த-பட்சம் ஒரு ஏக்கரில் உயிர்ம வேளாண்மையில் வேளாண், தோட்-டக்கலை பயிர்களை சாகுபடி செய்திருப்பதோடு முழுநேர உயிர்ம விவசாயியாக இருக்க வேண்டும். எந்த ரசாயன பொருட்க-ளையும் விவசாயத்தில் பயன்படுத்தி இருக்கக்கூடாது. குறைந்-தது, 3 ஆண்டு உயிர்ம வேளாண்மையில் ஈடுபட்டிருப்பதோடு உயிர்ம வேளாண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள், அக்-ரிஸ்நெட்(https://www.tnagrisnet.gov.in) வலைதளத்தில் செப்., 15க்குள் பதிவு செய்வதோடு பதிவு கட்டணம், 100 ரூபாயை, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு வேளாண் உதவி இயக்குனர் அல்லது இணை இயக்குனரை சந்திக்கலாம்.