ADDED : ஜூன் 08, 2024 02:17 AM
ஓமலுார்: பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது, தாக்குதல் நடத்தி மக்களை கொல்லும் இஸ்ரேலை கண்டித்து, நேற்று ஓமலுாரில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பஸ் நிலையம் எதிரே, நகர செயலர் சவுகத்அலி தலைமையில் நடந்த போராட்டத்தில், மாவட்ட செயலர் அமானுல்லா, இஸ்ரேலை கண்டித்து கோஷம் எழுப்பி பேசினார். ஒரு மணி நேரம் நடந்த போராட்டத்தில், 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.