/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மல்லுாரில் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு மல்லுாரில் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
மல்லுாரில் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
மல்லுாரில் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
மல்லுாரில் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
ADDED : ஜூன் 08, 2024 02:17 AM
பனமரத்துப்பட்டி: பல ஆண்டுகளாக, குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகளை, மல்லுார் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் துண்டித்தனர்.
மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், 1,100க்கும் மேற்பட்ட வீட்டு குடிநீர் இணைப்பு மற்றும் வியாபார குடிநீர் இணைப்பு உள்ளது. அதற்கு, மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், 200க்கும் மேற்பட்டோர், மாத கட்டணம் செலுத்தாமல் குடிநீர் எடுத்து வருகின்றனர். அதில், பலர் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாததால், குடிநீர் வடிகால் வாரியத்திற்கு, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் பல லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளது. குடிநீர் கட்டணத்தை ஒரு வாரத்திற்குள் செலுத்துபடி, சம்மந்தப்பட்டவர்களுக்கு டவுன் பஞ்சாயத்து நிர்வாகம், கடந்த மாதம் நோட்டீஸ் வழங்கியது. ஆனாலும், குடிநீர் கட்டணம் செலுத்தப்படவில்லை. நேற்று, டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள், திருச்சி சாலை, வெற்றி நகர், பனங்காடு, வேங்காம்பட்டி உள்ளிட்ட இடங்களில், கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். மேலும், குடிநீர் கட்டணம் பாக்கி வைத்துள்ள இணைப்புகள் துண்டிக்கப்படும் என, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.