/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாமாண்டியம்மன் கோவில் திருவிழா ஆடு,கோழிகளை பலியிட்ட பக்தர்கள் பாமாண்டியம்மன் கோவில் திருவிழா ஆடு,கோழிகளை பலியிட்ட பக்தர்கள்
பாமாண்டியம்மன் கோவில் திருவிழா ஆடு,கோழிகளை பலியிட்ட பக்தர்கள்
பாமாண்டியம்மன் கோவில் திருவிழா ஆடு,கோழிகளை பலியிட்ட பக்தர்கள்
பாமாண்டியம்மன் கோவில் திருவிழா ஆடு,கோழிகளை பலியிட்ட பக்தர்கள்
ADDED : ஜூலை 18, 2024 02:14 AM
வீரபாண்டி: பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்க-ளையும், ஆடு, மாடுகளை காக்க வேண்டி பாமாண்டியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சேலம், சீரகாபாடி அருகே கல்பாரப்பட்டி மினியனுாரில் அமைந்-துள்ளது பழமையான பாமாண்டியம்மன் கோவில். இங்கு ஆடி மாதப்பிறப்பையொட்டி நேற்று நடந்த விழாவில், சீரகாபாடி, கொம்பாடிப்பட்டி, கல்பாரப்பட்டி, சேனைப்பாளையம் உள்-ளிட்ட சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்-பத்துடன் கோவிலுக்கு வந்து ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து பாமாண்டியம்மனை வழிபட்டனர்.
இக்கோவிலில் வந்து பலியிட்டு பொங்கல் வைத்து பூஜை செய்தால் தங்கள் வீடு, வயல்களில் பாம்பு, பூரான், தேள் போன்ற எந்தவிதமான விஷ ஜந்துக்களும் வராது. மீறி வந்தாலும் யார் கண்ணிலும் படாமல் ஒதுங்கி சென்று விடும். மனிதர்கள் மட்டுமன்றி நாய், பூனை, ஆடு, மாடு, கோழிகளையும் விஷ ஜந்-துக்கள் தீண்டாது என்பது நம்பிக்கை. இன்றும் கூட பாம்பு கடித்-தவர்கள் இங்கு வந்து பூசாரியிடம் 'பாடம்' போட்டு விஷம் இறங்கி நல்லபடியாக வீட்டுக்கு செல்கின்றனர்.
இத்தகவலை, கோவில் பூசாரி சுப்பிரமணியம் தெரிவித்தார்.