Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ '810 உணவு நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு'

'810 உணவு நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு'

'810 உணவு நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு'

'810 உணவு நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு'

ADDED : ஜூன் 30, 2024 04:04 AM


Google News
சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவில் உணவு பாதுகாப்புத்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள, 36,625 உணவு வணிகங்களில், 34,242க்கு பதிவு சான்றிதழ், உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட, 810 உணவு நிறுவனங்கள் மீது குற்றவியல் வழக்குகள், 1,117 உரிமையியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், 209 கடைகளில் இருந்து, 2,739 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அதன் கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டதோடு, 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் போலீசாருடன் இணைந்து நடத்திய ஆய்வில், 135 கடைகள், போலீசாரின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், 73 கடைகள் என, 208 கடைகள் உள்பட, 417 கடைகள் இதுவரை மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 876 உணவு மாதிரிகளில் 36 தரத்தின்படி இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி உணவு பொருள் விற்ற, 28 கடைகளுக்கு 56,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட, 34,579 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோ டீசலாக மாற்ற அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை, 94440 - 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். TN Food Safety C0nsumer எனும் செயலி, food safety.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் மக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us