/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு பா.ஜ., துணைத் தலைவர் மீது புகார் முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு பா.ஜ., துணைத் தலைவர் மீது புகார்
முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு பா.ஜ., துணைத் தலைவர் மீது புகார்
முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு பா.ஜ., துணைத் தலைவர் மீது புகார்
முதல்வர் குறித்து அவதுாறு பேச்சு பா.ஜ., துணைத் தலைவர் மீது புகார்
ADDED : ஜூன் 19, 2024 01:53 AM
ஆத்துார், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதுாறாக பேசிய, பா.ஜ., மாநில துணைத் தலைவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, ஆத்துார் டி.எஸ்.பி.,யிடம், தி.மு.க.,வினர் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம், ஆத்துாரை சேர்ந்த, தி.மு.க., மாவட்ட பிரதிநிதி ஸ்டாலின், நகராட்சி கவுன்சிலர் பிரபு, மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பாசறை துணை அமைப்பாளர் இளங்கோவன், நிர்வாகிகள் சண்முகம், தணிகேசன், சக்திவேல், மணி உள்ளிட்டோர் நேற்று, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் மற்றும் ஆத்துார் ரூரல், டவுன், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி, மல்லியக்கரை ஆகிய ஏழு போலீஸ் ஸ்டேஷன்களிலும் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
கெங்கவல்லி அருகே உலிபுரத்தில், நேற்று முன்தினம் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் ராமலிங்கம், முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவான வார்த்தையில் பேசியுள்ளார். பொது இடத்தில், முதல்வர் ஸ்டாலினை அவதுாறாக பேசிய ராமலிங்கம், பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்த மாவட்ட தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது, கடுமையான குற்ற வழக்கு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,