மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2024 09:36 AM
சேலம்: மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முடக்கப்பட்ட, 18 மாத அகவிலைப்படி நிலுவை வழங்குதல்; 8வது சம்பள குழுவை அமைத்தல்; பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தபால் ஊழியர் சங்க மாவட்ட செயலர் நாராயணன், மத்திய அரசு பொதுத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலர் நேதாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.எஸ்.டி., அலுவலகம், வருமான வரி அலுவலகம், சூரமங்கலம் தபால் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.