/உள்ளூர் செய்திகள்/சேலம்/ இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு
இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு
இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு
இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு
ADDED : ஜூலை 23, 2024 01:12 AM
சேலம் : இந்து முன்னணி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்-கினார்.
தமிழகத்தில் இந்து கோவில்களை சீரழித்து வருவதாக கூறி தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்-பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோட்ட தலைவர் சந்தோஷ் குமார், மாநில செயலாளர், தாமு வெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன், உட்பட, 20 பேரையும் கைது செய்து விடுவித்தனர். இது தொடர்ந்து அனுமதியில்-லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சந்தோஷ் குமார் உட்பட 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.