/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தண்ணீரை சேமிப்பதில் கவனம் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் தண்ணீரை சேமிப்பதில் கவனம் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தண்ணீரை சேமிப்பதில் கவனம் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தண்ணீரை சேமிப்பதில் கவனம் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
தண்ணீரை சேமிப்பதில் கவனம் அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 01:06 AM
ஏற்காடு: ''காவிரி விவகாரத்தில் அரசியல் பார்க்காமல் தமிழக மக்களின் எதிர்கால தேவை கருதி, தண்ணீர் சேமிப்பதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்,'' என, பா.ம.க., தலைவர் அன்பு-மணி வலியுறுத்தினார்.
ஏற்காட்டில், நேற்று அவர் அளித்த பேட்டி:
மேட்டூர் அணை விரைவில் நிரம்பி உபரிநீர் கடலில் சென்று வீணாகும் நிலை உள்ளது. உபரிநீரை தமிழகத்துக்கு பயன்பெறும்-படி திட்டங்களை வகுக்க, பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வரு-கிறது. காவிரி குறுக்கே,
10 கி.மீ.,க்கு ஒரு தடுப்பணை கட்டினால், 70 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் மோச-மான விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் நீர் மேலாண்மையில் தமிழக அரசு முதலீடு செய்து திட்-டங்களை செயல்படுத்த வேண்டும். காவிரி விவகாரத்தில் அர-சியல் பார்க்காமல் தமிழக மக்களின் எதிர்கால தேவை கருதி, தண்ணீர் சேமிப்பதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஒரு மாதத்தில், 100க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதை தடுக்காமல், முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.