ADDED : ஜூலை 18, 2024 02:13 AM
ஏற்காடு: ஆத்துாரை சேர்ந்த விஜி என்பவர் தன் நண்பர்களான அரவிந்த் குமார், கார்த்திக் ஆகியோருடன் ரெனால்ட் குவிட் காரில் நேற்று ஏற்காடு வந்துள்ளனர்.
பின் அவர்கள் மது அருந்திய நிலையில், ஏற்காட்டை சுற்றி பார்த்துவிட்டு மதியம், 2:40 மணிக்கு பகோடா பாயின்ட் காட்சி முனையில் இருந்து ஏற்காடு நோக்கி வந்துள்ளனர். அப்போது, செவ்வாய்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ வர்ஷன், 38, அவரது நண்பர் அஜித்குமார் ஆகியோர் ஓட்டி வந்த பல்சர் பைக் மீது நேருக்கு நேர் கார் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்-டனர். காரை ஓடிவந்த விஜி உள்பட மூவரும் மது அருந்தி இருந்-தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, காரை ஏற்காடு போலீசார் பறிமுதல் செய்தனர்.