/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2047க்குள் 1.50 லட்சம் நிறுவன செயலர் தேவை அகில இந்திய தலைவர் தகவல் 2047க்குள் 1.50 லட்சம் நிறுவன செயலர் தேவை அகில இந்திய தலைவர் தகவல்
2047க்குள் 1.50 லட்சம் நிறுவன செயலர் தேவை அகில இந்திய தலைவர் தகவல்
2047க்குள் 1.50 லட்சம் நிறுவன செயலர் தேவை அகில இந்திய தலைவர் தகவல்
2047க்குள் 1.50 லட்சம் நிறுவன செயலர் தேவை அகில இந்திய தலைவர் தகவல்
ADDED : ஜூலை 22, 2024 07:08 AM
ஏற்காடு : மத்திய அரசின் பெரு நிறுவன விவகார துறை கட்டுப்பாட்டில் உள்ள, இந்திய நிறுவன செயலர்கள் கூட்டமைப்பின், சேலம் கிளை சார்பில், 3 நாள் கருத்தரங்கம், ஏற்காட்டில் நடந்தது. அதன் நிறைவு விழாவில் அகில இந்திய தலைவர் நரசிம்மன் பங்-கேற்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நிறுவன செயலர் படிப்பு, தணிக்கையியல் துறைக்கு அடுத்து முக்-கிய பங்கு வகிக்க கூடியது. இத்துறையில் இந்தியாவில் தற்-போது, 70,000 பேர் உள்ளனர். இது போதுமானதாக இல்லை. 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிறுவன செயலர் படிப்பு முடித்தவர்கள், 1.50 லட்சம் பேர் தேவைப்படுவர். இத்துறையை தேர்வு செய்து படிக்க, மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளி கல்வியில் இருந்தே வணிகவியல் துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு செய்து படிப்பது சிரமம். ஆனால், படித்து முடித்ததும் வேலை உறுதி. இதை உணர்ந்து முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
உலகளவில் இந்தியாவில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்-டுகின்றனர். இதனால் இந்திய பங்குச்சந்தை புள்ளி தொடர்ந்து அதிகரித்து செல்கிறது. பொருளாதார வளர்ச்சியில், 10ம் இடத்தில் இருந்த இந்தியா, 5ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மத்திய அரசு, நீடித்த வளர்ச்சியை கொண்டு செல்கையில் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயர வாய்ப்புள்ளது. 2025க்குள், 5 டிரில்லயன் டாலர் வளர்ச்சிக்கு அரசு திட்டமிட்-டது. கொரோனா பாதிப்பால் தொய்வு ஏற்பட்டது.
தற்போது, 4 டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரம் உயர்ந்-துள்ளது. 2030க்குள், 10 டிரில்லியன், 2047க்குள், 30 டிரில்லியன் டாலராக உயரும். 2030க்குள் பொருளாதார வளர்ச்சியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும்.
அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்தில் பணியாற்றி திரும்பும் வீரர்கள், கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்தோர், ஜம்மு - காஷ்மீரில் உள்ளோர் ஆகியோருக்கு, நிறுவன செயலர் படிப்-புக்கு, முழு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்-புக்கு, 5 ஆண்டுக்கு ஒருமுறை புது பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய கூட்டமைப்பின் தென்னிந்திய பிரதிநிதி மோகன்குமார், சேலம் கிளை தலைவர் பூர்ணிமா, கிளை செயலர் ஹரிஷ் உடனி-ருந்தனர்.
முன்னாள் அமைச்சர் மணியன், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.