Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'உத்வேகத்தை ஏற்படுத்தும் முன்னாள் மாணவர் சந்திப்பு'

'உத்வேகத்தை ஏற்படுத்தும் முன்னாள் மாணவர் சந்திப்பு'

'உத்வேகத்தை ஏற்படுத்தும் முன்னாள் மாணவர் சந்திப்பு'

'உத்வேகத்தை ஏற்படுத்தும் முன்னாள் மாணவர் சந்திப்பு'

ADDED : ஜூலை 22, 2024 07:08 AM


Google News
கெங்கவல்லி : கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 1989ல், பிளஸ் 2 கணித பிரிவில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் படித்த, ஆணையாம்-பட்டியை சேர்ந்த பிரபாகரன், கிருஷ்ணகிரி, ஈரோடு கலெக்டராக பணிபுரிந்து, தற்போது தமிழக அரசின் நகர்புற குடிசை மாற்று வாரிய செயலராக உள்ளார்.

மற்றொரு பிரபாகரன், லண்டனில் இருந்து வந்து, இந்நிகழ்ச்-சியில் பங்கேற்றனர். 9 ஆசிரியர்களை வரவழைத்து, முன்னாள் மாணவர்கள், 38 பேர், நினைவு பரிசு வழங்கி, பள்ளியில் படித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து குடும்பத்தின-ராக பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், குழு புகைப்படம் எடுத்-துக்கொண்டனர்.

தொடர்ந்து அரசு செயலர் பிரபாகரன் பேசுகையில், ''பள்ளி பரு-வத்தில் படித்த மாணவர்களை மீண்டும் பார்க்கும்போது மனதில் உத்வேகம் ஏற்படுகிறது. வரும் டிசம்பரில் விழாவாக நடத்த வேண்டும். இதில் முன்னாள் மாணவர்கள் மட்டுமின்றி, தற்-போது படிக்கும் மாணவர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும். படித்த பள்ளிக்கு, இயன்ற உதவிகளை செய்யலாம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us