/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முதலுதவி மையமாக செயல்படும் வாழப்பாடி மருத்துவமனை வாட்ச்மேன் இல்லாததால் பாதுகாப்பில்லாத அவலம் முதலுதவி மையமாக செயல்படும் வாழப்பாடி மருத்துவமனை வாட்ச்மேன் இல்லாததால் பாதுகாப்பில்லாத அவலம்
முதலுதவி மையமாக செயல்படும் வாழப்பாடி மருத்துவமனை வாட்ச்மேன் இல்லாததால் பாதுகாப்பில்லாத அவலம்
முதலுதவி மையமாக செயல்படும் வாழப்பாடி மருத்துவமனை வாட்ச்மேன் இல்லாததால் பாதுகாப்பில்லாத அவலம்
முதலுதவி மையமாக செயல்படும் வாழப்பாடி மருத்துவமனை வாட்ச்மேன் இல்லாததால் பாதுகாப்பில்லாத அவலம்
UPDATED : ஜூலை 30, 2024 02:57 AM
ADDED : ஜூலை 30, 2024 02:36 AM
வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் செயல்பட்டு வந்த அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், 2016 ஏப்., 1ல், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தினமும், 500 முதல் 600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு எட்டு ஆண்டு கடந்தபோதும், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகப்-பேறு, குழந்தைகள் நலம், பொது மருத்துவ நிபுணர்கள், ஆய்வக பரிசோதகர், இரவு நேர பணியாளர், மருத்துவ உதவியாளர்கள் என, போதிய அளவிற்கு நியமிக்கப்படவில்லை. இதனால் கர்ப்பி-ணிகள், நோயாளிகள், சேலம் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அரசு மருத்துவமனை-யாக இருந்தும், ஆரம்ப சுகாதார நிலையம் போன்று தான் செயல்-படுகிறது.
துக்கியாம்பாளையம், பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் ஆர்.முருகன், 49, கூறியதாவது: கடந்த, 2016ல், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்திய பின், 80 லட்சம் ரூபாயில், 30 படுக்கைகள் கொண்ட கட்டடத்தை, 2017ல், அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்., திறந்து வைத்தார். தொடர்ந்து ஆண், பெண் தலா, 15 படுக்கை, அறுவை சிகிச்சை, 10 படுக்கை, மகப்பேறு முன் மற்றும் மகப்-பேறு பின் கவனிப்பு பிரிவு, 10 படுக்கை, மகப்பேறு ஐந்து படுக்கை, குழந்தைகள் நலம் ஐந்து படுக்கை என, மொத்தம், 60 படுக்கைகள் வரை விரிவுபடுத்தப்பட்டது. 2019ல், வாழப்பாடி அரசு மருத்துவமனையில், 49.61 லட்சம் ரூபாயில், பிணவறை கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாதந்தோறும், 100க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்து வரும் நிலையில், 60க்கும் மேற்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படு-கிறது. இங்கு, எலும்பு முறிவு மருத்துவர் பணியிடம் மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளதால், சேலம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இங்கு முதலுதவி சிகிச்சை மையம் போன்று தான் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
மன்னநாயக்கன்பட்டி, அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ஜி.செல்வ-நாராயணன், 45, கூறுகையில், '' அ.தி.மு.க., ஆட்சியின்போது, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தியபோதும், தி.மு.க., ஆட்-சியில் புதிய மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தவில்லை. பிண-வறை கூடம் கட்டடம் உள்ள நிலையில், அங்கு மின் விளக்கு வசதி கூட இல்லை. ஆண் உதவியாளர் இல்லாததால், உடற்கூ-றாய்வு பணி மேற்கொள்வதில்லை. ஐ.சி.யு., வசதி இல்லை. இரவு நேரத்தில் வாட்ச்மேன் இல்லாததால், குடிமகன்கள் உள்ளே புகுந்து ரகளை செய்கின்றனர். பெண் செவிலியர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரிகின்றனர். நரம்பு, ஆர்தோ, பொது அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடம் இல்லை,'' என்றார்.
விலாரிபாளையம் பா.ம.க., ஒன்றிய கவுன்சிலர் வி.ரம்யா, 35, கூறுகையில், '' தினமும் ரத்த அளவு, மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல், ரத்த சர்க்கரை அளவு போன்றவை குறித்து, ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. இங்கு, ஆய்வக பணியாளர் பணியிடம் இல்லாததால், வேறு மருத்துவமனையில் இருந்து வருகின்றனர். இதனால் பரிசோதனை செய்வதற்கு தாமதம் ஏற்படுகிறது,'' என்றார்.இதுகுறித்து, வாழப்பாடி தலைமை மருத்துவ அலுவலர் கே.பி.ரமேஷ்குமார் கூறுகையில், '' வாழப்-பாடியில், 24 மணி நேர விபத்து, மகப்பேறு சிகிச்சை மேற்கொள்-ளப்படுகிறது. காலி பணியிடம், மருத்துவ வசதிகள் குறித்து, அர-சுக்கு கோப்பு அனுப்பியுள்ளோம். புதிய கட்டடம் பயன்பாட்-டிற்கு வந்தால், 24 படுக்கைகள், நவீன அறுவை அரங்கம் இருக்கும். பிணவறை கூடத்தில், ஆறு உடல்கள் வைக்கும் வகையில் வசதிகள் உள்ளன. இதுவரை, 13 உடல்கள் உடற்கூ-றாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆண் உதவியாளர் இல்லாததால், சில நேரங்களில் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இரவு வாட்ச்மேன் இல்லாததால், பாதுகாப்பிற்காக எட்டு இடங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எலும்பு முறிவு மருத்-துவர் இல்லாததால், விபத்துகளில் கை, கால் முறிவு ஏற்பட்டவர்-களை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியுள்-ளது,'' என்றார்.
இதுப்பற்றி, சேலம் சுகாதார இணை இயக்குனர் ராதிகா கூறு-கையில், ''வாழப்பாடி அரசு மருத்துவமனையில், தாய் திட்-டத்தில், 3.63 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இப்பணிகள் முடிந்த பின், மருத்துவமனை வழிப்பாதை உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்படும். இங்கு, எலும்பு முறிவு மருத்துவர் பணியிடம் இல்லை. இரவு நேர வாட்ச்மேன் பணியிடம் ஒதுக்கீடு இல்லை. பிணவறை கூடம் உள்ளதால், உடற்கூறாய்வு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு, உடற்கூ-றாய்வு செய்யவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.