/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்வாய் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு கால்வாய் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கால்வாய் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கால்வாய் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
கால்வாய் பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
ADDED : ஜூலை 30, 2024 02:46 AM
சேலம்: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கால்வாய் பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க, கமிஷனர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகராட்சியில், பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்-பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில், புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்-ளப்பட்டு வருகின்றன. இதில், ஒவ்வொரு மழை காலத்திலும், அஸ்தம்பட்டி 17 வது வார்டில் உள்ள, சாரதா கல்லுாரி சாலை, பேர்லேண்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி வந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில், பேர்லேண்ட்ஸ் முருகன் கோவில் முதல், புது பஸ் ஸ்டாண்டு, ஓமலுார் பிரதான சாலை வரை, 3 மீட்டர் அகலத்தில் ஓடை அமைக்கும் பணி நடந்து வரு-கிறது.நேற்று கமிஷனர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.