Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்கு வந்து பரிதவிப்பு 31 மாணவ, மாணவியரை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு

வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்கு வந்து பரிதவிப்பு 31 மாணவ, மாணவியரை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு

வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்கு வந்து பரிதவிப்பு 31 மாணவ, மாணவியரை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு

வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்கு வந்து பரிதவிப்பு 31 மாணவ, மாணவியரை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு

ADDED : ஜூலை 22, 2024 07:05 AM


Google News
வங்கதேசத்தில் இருந்து இந்திய எல்லைக்கு வந்து பரிதவித்த, 31 மாணவ, மாணவியரை, விமானம் மூலம் சென்னை அழைத்து வர, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக, மாணவர்கள் நடத்திய போராட்-டத்தில் வன்முறை ஏற்பட்டு, 120 பேர் பலியானதால், நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு படிக்க சென்றவர்கள், அவரவர் நாட்டுக்கு ராணுவ பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்துாரை சேர்ந்த, த.மா.கா., நகர தலைவர் சண்முகத்தின் மகள் ஜனனிபிரியா, 19; வங்கதேசம், டாக்காவில் அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இரண்டாமாண்டு படிக்கிறார். இவர் உள்பட சென்னை, கும்பகோணம், திருச்சி, செஞ்சி, கடலுார் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த, 32 மருத்துவ மாணவ, மாணவியர் மட்டுமின்றி, மற்ற மாநிலங்களை சேர்ந்-தவர் என, 180 பேரை, நேற்று காலை, 7:30 மணிக்கு இந்திய எல்லையான மேற்கு வங்க மாநிலம் ஹில்லி என்ற இடத்தில், வங்கதேச ராணுவத்தினர் விட்டுச்சென்றனர். இதில் மற்ற மாநில மாணவர்களை, அந்தந்த மாநில அரசுகள் மீட்டுச்சென்றன. ஒரு தமிழக மாணவர், சொந்த செலவில் சென்றார். மீதி, 31 தமிழக மாணவ, மாணவியர், காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை உணவு, தண்ணீரின்றி அவதிப்பட்டனர். அவர்கள், 'உடலில் எனர்ஜி இல்லை; எங்கள் போனிலும் சார்ஜ் இல்லை' என பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கண்ணீர் விட்டனர். குறிப்-பாக ஜனனிபிரியா, அங்குள்ள நிலை குறித்து தெரிவித்தார்.

தொடர்ந்து, 'மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா சென்று அங்கி-ருந்து சென்னை வர, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்' என பேசி, ஆடியோ வெளியிட்டார். இதுகுறித்து செய்தி வெளி-யானதும், மாணவ, மாணவியரை மீட்பது தொடர்பாக, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி கோல்கட்டாவில் இருந்து சென்னைக்கு மாணவ, மாணவியரை, விமானம் மூலம், நாளை மதியம், 3:00 மணி, மாலை, 5:00 மணி என, இரு கட்டமாக அழைத்து வர, தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து சண்முகம் கூறுகையில், ''தமிழகத்தை சேர்ந்த, 31 மாணவ, மாணவியர், இந்திய எல்லையில் பரிதவித்த நிலையில் அதுகுறித்த செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக அரசு செலவில், அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது. எங்கள் குழந்தையை மீட்டு வர எடுத்த முயற்சிக்கு நன்றி,'' என்றார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us