Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழில்களுக்கு முக்கியத்துவம்; தமிழகத்துக்கு நிதி அளிக்கா-தது ஏமாற்றம் மத்திய பட்ஜெட் குறித்து சேலம் முக்கிய பிரமுகர்கள் கருத்து

தொழில்களுக்கு முக்கியத்துவம்; தமிழகத்துக்கு நிதி அளிக்கா-தது ஏமாற்றம் மத்திய பட்ஜெட் குறித்து சேலம் முக்கிய பிரமுகர்கள் கருத்து

தொழில்களுக்கு முக்கியத்துவம்; தமிழகத்துக்கு நிதி அளிக்கா-தது ஏமாற்றம் மத்திய பட்ஜெட் குறித்து சேலம் முக்கிய பிரமுகர்கள் கருத்து

தொழில்களுக்கு முக்கியத்துவம்; தமிழகத்துக்கு நிதி அளிக்கா-தது ஏமாற்றம் மத்திய பட்ஜெட் குறித்து சேலம் முக்கிய பிரமுகர்கள் கருத்து

ADDED : ஜூலை 24, 2024 07:47 AM


Google News
சேலம்: லோக்சபாவில், 2024 - 25ம் நிதியாண்டு மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம்; தங்கம், வெள்ளி, மொபைல் போன் விலை குறைவு உள்ளிட்ட சாதக விஷயங்கள் உள்ளதாக, சேலம் முக்கிய பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர். அதேநேரம் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு, தமிழகத்துக்கு கிள்ளிக்-கூட தராதது ஏமாற்றம் அளிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

அதன் விபரம் வருமாறு:

சேலம், பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் பி.ஏ.சங்கர்: தனி நபரின் ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய் வரை வரி இல்லை. அத்துடன் வரிச்சலுகையில் நிலையான கழிவு, 50,000 ரூபாயில் இருந்து, 75,000 ரூபாயாக அதிகரிக்கப்-பட்டுள்ளது. புது வரிவிதிப்பு, கழிவுத்தொகை மூலம் மாத ஊதியம் பெறுவோருக்கு, 17,500 ரூபாய் வருமானவரி சலுகை கிடைக்கும். நடுத்தர வர்க்கத்துக்கும், மாத ஊதியம் பெறும், 4 கோடி ஊழியர்களுக்கும் இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது. மொபைல் போன், அதன் உதிரி பாகம், சார்ஜர்களுக்கு வரிச்சலு-கையால் விலை கணிசமாக குறைகிறது. தங்கம், வெள்ளிக்கு சுங்க வரி குறைப்பால் அதன் விலையும் குறைந்து, ஏழை, நடுத்-தர குடும்பங்கள் பயன்பெறுவர்.

சேலம் உணவு எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்-தலைவர் பி.திருமுருகன்: இயற்கை விவசாயத்தை மேம்படுத்த, 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்ப-தோடு, 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்குவது, உயர்கல்வி கற்க, 10 லட்சம் ரூபாய் வரை கடனு-தவி அளிப்பது வரவேற்கத்தக்கது. முத்ரா கடன் வரம்பு, 10 லட்-சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, புது தொழில் முனைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, புது வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். அத்துடன் உற்பத்தி துறையில் ஒரு கோடி இளைஞர்கள் பயிற்சி பெற்றால் வளர்ச்சியை நோக்கி சமூகம் இருக்கும். ஆனால் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதியை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு, தமிழகத்துக்கு கிள்ளிக்-கூட தராதது ஏமாற்றம். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை இல்லை.

சேலம் மாநகர் தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கத்த-லைவர் ஏ.ஆனந்த்குமார்: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி, 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான வரி, 6.4 சதவீதமா-கவும் குறைக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடுகளை விட, இந்தியாவில் இருந்த அதிக விலை வித்தியாசம் குறைந்துள்ளது. அத்துடன் நுகர்வோருக்கும் பாரம் குறைந்துள்ளது. நகர் புறத்தில் உள்ள ஏழை மக்களுக்கு ஒரு கோடி வீடுகள் கட்ட முடிவு செய்தி-ருப்பதும், பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யும்போது, முத்திர தீர்வை குறைப்பதும் பாராட்டத்தக்கது. அதேபோல் சூரிய வீடுகள் இலவச மின்சார திட்டம் வரவேற்கத்தக்கது என்பதால் அனைவருக்குமான பட்ஜெட்டாக உள்ளது.

சேலம் வக்கீல் சி.நாச்சிமுத்துராஜா: முத்ரா கடன் தொகை, 10 லட்சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதன் மூலம் அதிகளவில் இளம் தொழில் முனைவோர் பயன்பெறுவர். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண், அது சார்ந்த தொழிலுக்கு, 1,51,851 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது வளர்ச்-சிக்கு வித்திடும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தாமத-மானால் எடுக்கப்படும் கிரிமினல் நடவடிக்கை ரத்து செய்துள்ளது பாராட்டத்தக்கது.

சேலம் மூளை, நரம்பியல் நிபுணர் என்.பாலமுருகன்: சுகாதாரத்-துறைக்கு, 89,287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் உள்ள, கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் வரவேற்கத்தக்கது. அங்கன்வாடி ஊழியர்க-ளுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்துவது நல்ல விஷயம். குறிப்பிட்ட சில மருந்துகள், மருத்துவ உபகரணங்க-ளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை கட்டணம் கணிச-மாக குறையும். புற்றுநோயை குணப்படுத்தும், 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரி ரத்தால், அந்த நோயாளிகளுக்கு நல்ல செய்தி.

சேலம் ஜீவா பப்ளிக் பள்ளி தலைவர் பி.அங்கமுத்து: கல்-விக்கு, 1,25,638 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி விலை, மொபைல் போன் உள்ளிட்ட விலை குறைக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். காசி விஸ்வநாதர் கோவில் சுற்றுலா தலமாக மேம்படுத்துவது, ஆன்மிக உணர்வை அதிகப்படுத்தும். சிறு, குறு நடுத்தர தொழில்களுக்கு பட்-ஜெட்டில் அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்-தாலும் தமிழகத்துக்கு போதிய நிதி வழங்காமல் வஞ்சித்துவிட்-டது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி தராமல் மத்திய அரசு அர-சியல் செய்துவிட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us