ADDED : ஜூலை 08, 2024 04:58 AM
சேலம் : ஓமலுார், தேக்கம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மனைவி சந்-தியா, 25.
இவர் பிரசவத்துக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்து-வமனையில் கடந்த ஜூன், 23ல், அனுமதிக்கப்பட்டார். மறுநாள் ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, 3 நாள் சிகிச்சையில் இருந்த அவர், திடீரென உடல் சுகவீனம் அடைந்தார். அடுத்த-டுத்து இரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர், மேல் சிகிச்சைக்கு கடந்த, 1ல் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்துவிட்டார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.