Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி ஒப்பந்த தொழிலாளி பலி

ADDED : ஜூலை 23, 2024 01:07 AM


Google News
ஓமலுார் : புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட, ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே வனவாசி மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை,40. ஓமலுார் அருகே பஞ்சுகா-ளிப்பட்டி துணை மின் அலுவலக ஒப்பந்தப் பணியாளர். மனைவி ஜோதி கலையரசி, 37. மகள், மோனிகாஸ்ரீ,9. பூவரசி, 7. மற்றும் 6 மாத குழந்தை உள்ளது. நேற்று காமாண்டப்பட்டி பகுதியில் உள்ள, பழைய டிரான்ஸ்பார்மை மாற்றிவிட்டு, புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணி நடைபெற்றது. அதற்காக, காமாண்டபட்டி பஸ் நிறுத்தம் அருகே, புதிய மின் கம்பம் அமைக்கும் பணி நடந்தது.

பழைய இரும்பு மின் கம்பத்திலிருந்து, மின் கம்பிகளை அகற்-றிவிட்டு, புதிய மின்கம்பத்தில் கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய மின்கம்பத்தில் மின்சாரத்தை தடை செய்ய, டிரான்ஸ்பார்மில் மின்சாரத்தை நிறுத்துவதற்காக ஒயர் மேன்கள் சென்றுள்ளனர்.

புது மின்கம்பத்தில் எர்த் லோடு கொடுக்க, பழைய மின் கம்-பத்தில் ஏழுமலை ஏறிய போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்-பட்டார். தலை உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டு சம்-பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓமலூர் போலீஸ் இன்ஸ்-பெக்டர் லோகநாதன், சடலத்தை மீட்டு விசாரிக்கிறார்.

டிரான்ஸ்பார்மில் மின்சாரம் மாற்றி கொடுப்பதில் ஏற்பட்ட குள-றுபடியால், பழைய மின்கம்பியில் மின்சாரம் தடையில்லாமல் வந்துள்ளதால், ஏழுமலை மின்சாரம் தாக்கி இறந்திருப்பது முதற்-கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசா-ரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us