/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 குழந்தைகளின் தாய் தற்கொலை 43 நாட்களுக்கு பின் உறவினர்கள் மறியல் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை 43 நாட்களுக்கு பின் உறவினர்கள் மறியல்
2 குழந்தைகளின் தாய் தற்கொலை 43 நாட்களுக்கு பின் உறவினர்கள் மறியல்
2 குழந்தைகளின் தாய் தற்கொலை 43 நாட்களுக்கு பின் உறவினர்கள் மறியல்
2 குழந்தைகளின் தாய் தற்கொலை 43 நாட்களுக்கு பின் உறவினர்கள் மறியல்
ADDED : ஜூலை 23, 2024 01:06 AM
சேலம் : சேலம் நெத்திமேடு, மணியனுார் பாரதிநகரை சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ்,27; வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி வினிதா,23. இருவருக்கும், 2017 ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு, மகன் மித்ரன்,6, இரண்டரை வயதில் அகல்யா என்கிற மகள் உள்ளார்.
கடந்த ஜூன் 9ல், வீட்டு குளியல் அறையில், வினிதா துாக்கில் பிணமாக தொங்கினார். அன்னதானப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். சேலம் ஆர்.டி.ஒ., விசாரணைக்கு பின், வினிதாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வினிதாவை கொலை செய்து, துாக்கில் தொங்க-விட்டதாக கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் மீது குற்றம்சாட்டி, 43 நாட்களுக்கு பின், அவரது தாய் சுமதி உள்பட உறவினர்கள் நேற்று காலை, 11:30 மணியளவில், சேலம் கலெக்டர் அலுவ-லகம் முன் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த டவுன் உதவி போலீஸ் கமிஷனர் ஹரிசங்கரி ஜீப்பை முற்றுகையிட்டு, வினி-தாவின் சாவுக்கு நியாயம் கேட்டனர்.
இன்ஸ்பெக்டர் சின்னதங்கம், முற்றுகையிட்டவர்களுடன் பேச்-சுநடத்தி சமாதானம் செய்தார். அதன்பின், தாய் சுமதி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தபின் மறியல் கைவிடப்பட்டது.
அன்னதானப்பட்டி போலீசார் கூறுகையில், 'ஆர்.டி.ஒ., விசார-ணையில், வரதட்சணை கொடுமை இல்லை. துாக்குபோட்டு வினிதா தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. சட்டப்படி உடற்கூறு ஆய்வு செய்து வினிதாவில் உடல் ஒப்படைக்கப்பட்-டது. தற்போது, வினிதாவை கொலை செய்து விட்டதாக கூறுவது வியப்பாக உள்ளது' என்றனர்.