Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ உருண்டை ரக மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.700 சரிவு

உருண்டை ரக மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.700 சரிவு

உருண்டை ரக மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.700 சரிவு

உருண்டை ரக மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.700 சரிவு

ADDED : ஜூன் 15, 2024 07:09 AM


Google News
ஆத்துார் : சேலம் மாவட்டம் ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், 1,070 மூட்டைகளில், 637.99 குவிண்டால் மஞ்சளை கொண்டு வந்தனர். ஆத்துார், சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதி வியாபாரிகள், தரத்துக்கு ஏற்ப விலையை நிர்ணயித்தனர்.

குவிண்டால் விரலி ரகம், 16,169 முதல், 19,269 ரூபாய்; உருண்டை ரகம், 15,369 முதல், 16,559 ரூபாய்; பனங்காலி(தாய் மஞ்சள்), 19,539 முதல், 23,569 ரூபாய் வரை விலைபோனது. 1,070 மூட்டைகள் மூலம், 1.07 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு விரலி ரகம், 200 ரூபாய், உருண்டை ரகம், 700 ரூபாய் விலை குறைந்தது. பனங்காலி ரகம், 300 ரூபாய் விலை

உயர்ந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us