மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 15, 2024 07:09 AM
சேலம் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மாநில, மாவட்ட, கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள், ஊராட்சி, வட்டார அளவில் கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், நகர்புறங்களில் உள்ள சுய உதவி குழுக்கள், பகுதி, தொகுதி அளவில் கூட்டமைப்பினருக்கு மணிமேகலை விருது வழங்க தமிழக அரசு, 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்துள்ளது.
இந்த விருது தேர்வுக்கு தகுதி அடிப்படையில், 6 மதிப்பீட்டு காரணிகள் மூலம் தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனால், 2023 - 24ல், விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்பினரிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகின்றன.
விருதுக்கான முன்மொழிவை ஜூலை, 5க்குள், 'திட்ட இயக்குனர், மாவட்ட மேலாண்மை அலகு(மகளிர் திட்டம்), 2ம் தளம் அறை எண்: 207, கலெக்டர் அலுவலகம், சேலம்' என்ற முகவரியில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க
வேண்டும்.