/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர் ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்
ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்
ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்
ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்
ADDED : மார் 23, 2025 01:01 AM
ரயிலில் லேப்டாப் திருட்டு2 வாலிபர்கள் சிக்கினர்
சேலம்:தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சாய்குமார், 35. தொழில் நிமித்தமாக கடந்த, 20ல், எழும்பூர் ரயிலில், சேலம் புறப்பட்டார். மறுநாள் காலை, 5:30 மணிக்கு சேலம் வந்து சேர்ந்தது. அப்போது அவரது பையில் வைத்திருந்த லேப்டாப், ஏ.டி.எம்., 4,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. அவர் புகார்படி, சேலம் ரயில்வே போலீசார், அங்குள்ள வங்கி ஏ.டி.எம்., மைய கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, திருடிய நபர், ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்திய காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து தேடிய நிலையில், நேற்று, சேலம் ரயில்வே ஸ்டேஷன் எதிரே பஸ்சுக்கு காத்திருந்த அவரை பிடித்து விசாரித்ததில், காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபால், 29, என தெரிந்தது. ரயிலில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து, 1.79 லட்சம் ரூபாய் மதிப்பில், லேப்டாப் மீட்கப்பட்டது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் திருப்பூர் மாவட்டம் மன்னாரை அடுத்த பழையன்காட்டை சேர்ந்த சுமதி, 23, கடந்த, 22ல், சென்னை - கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று, சேலத்தை அடைந்த
போது, அவரது லேப்டாப் பையுடன் காணவில்லை. அவர் தகவல்படி, அங்கிருந்த ரோந்து போலீசார், சந்தேகத்தின் பேரில் ரயிலில் இருந்து இறங்கியவரை பிடித்து விசாரித்ததில், சென்னை, பல்லாவரம், பொலச்சலுாரை சேர்ந்த அழகுசுந்தரம், 23, லேப்டாப்பை திருடியதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.