கும்பாபிேஷக விழாமுகூர்த்தக்கால் நடல்
கும்பாபிேஷக விழாமுகூர்த்தக்கால் நடல்
கும்பாபிேஷக விழாமுகூர்த்தக்கால் நடல்
ADDED : மார் 21, 2025 01:29 AM
கும்பாபிேஷக விழாமுகூர்த்தக்கால் நடல்
சேலம்:சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் கும்பாபிேஷகம் ஏப்., 20ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அறங்காவலர் குழு தலைவி வெங்கடேஸ்வரி, செயல் அலுவலர் அனிதா முன்னிலையில், கோவில் பட்டாச்சாரியார் சுதர்சன், முகூர்த்த கம்பத்துக்கு அபிேஷகம் செய்தார். மலர்களால் அலங்கரித்து யாகசாலை அமையவுள்ள இடத்தில், திரளான பக்தர்கள் சேர்ந்து நட்டனர். பின் சிறப்பு பூஜை நடந்தது. அறங்காவலர் குழுவினர், கும்பாபிேஷக திருப்பணியில் ஈடுபட்டுள்ள உபயதாரர்கள், நன்கொடை அளித்தவர்கள் பங்கேற்றனர்.