/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பாரபட்சமாக நடக்கும் போலீசார்சேலம் மாநகர் பா.ஜ., குற்றச்சாட்டு பாரபட்சமாக நடக்கும் போலீசார்சேலம் மாநகர் பா.ஜ., குற்றச்சாட்டு
பாரபட்சமாக நடக்கும் போலீசார்சேலம் மாநகர் பா.ஜ., குற்றச்சாட்டு
பாரபட்சமாக நடக்கும் போலீசார்சேலம் மாநகர் பா.ஜ., குற்றச்சாட்டு
பாரபட்சமாக நடக்கும் போலீசார்சேலம் மாநகர் பா.ஜ., குற்றச்சாட்டு
ADDED : மார் 21, 2025 01:29 AM
பாரபட்சமாக நடக்கும் போலீசார்சேலம் மாநகர் பா.ஜ., குற்றச்சாட்டு
சேலம்:பா.ஜ.,வின், சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மரவனேரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில், பா.ஜ., மகளிர் அணியினரால் முதல்வர் படம் ஒட்டப்பட்டு வருகிறது. சேலம் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி சுமதி தலைமையில் மகளிர் அணியினர், நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைக்கு செல்லும் முன்பே தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
பின், 'ரிமாண்ட்' செய்ய நடவடிக்கை எடுத்து, பா.ஜ.,வினர் எதிர்ப்புக்கு பின், ஸ்டேஷன் பெயிலில் விடப்பட்டனர். கொலை குற்றம் செய்தவரை போன்று, போலீசார் நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொடும்பாவி எரித்தனர். அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. போலீசார் பாரபட்சமாக நடக்கின்றனர். பா.ஜ., மகளிர் எங்கும் செல்ல முடியாதபடி, வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
தொண்டர்களின் எண்ணங்கள், கருத்துகளை தெரிவிக்க கூட, சுதந்திரம் இல்லாத நிலை உள்ளது. நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டால், 1,008 விதிமுறைகளை விதிக்கின்றனர். ஆளுங்கட்சியினருக்கு எந்த விதிமுறையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.