/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
14 தாலுகா அலுவலகங்கள் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 07:36 AM
சேலம், : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சேலம், அஸ்தம்பட்டி மைய தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார்.
அதில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தல்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் காலத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், தி.மு.க., நிறைவேற்றுதல்; 21 மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்-பட்ட சரண்டர் லீவு உள்ளிட்ட உரிமைகளை உடனே வழங்-குதல்; வரையறுக்கப்பட்ட, 3.50 லட்சம் ஊழியர்களுக்கு கால-முறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்-கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட துணைத்தலைவர் ராணி, இணை செயலர் திருநாவுக்கரசு வட்ட கிளை தலைவர் முருகபெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன் வட்ட கிளை தலைவர் சுந்தர்ராஜன்; ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், வட்ட தலைவர் சீனிவாசன்; ஏற்காட்டில் வட்ட செயலர் செல்வ-குமார், வாழப்பாடியில் மாவட்ட தலைவர் திருவேரங்கன் தலை-மை என, மாவட்டம் முழுதும், 14 தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.