/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் திருட்டு
ADDED : ஜூலை 03, 2024 07:37 AM
கெங்கவல்லி : கெங்கவல்லி, கணவாய்காட்டை சேர்ந்த சேகர் மனைவி சித்ரா, 48. இவரது மருமகள் அனிதா, 22. இவர்கள் நேற்று காலை, 8:00 மணிக்கு, கெங்கவல்லியில் உள்ள தனியார் மருத்துவம-னைக்கு சென்றனர். இரவு, 8:00 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது, கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 14 பவுன், 30,000 ரூபாயை, மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது-குறித்து கெங்கவல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். முன்னதாக, ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ வீட்டில் ஆய்வு செய்தனர்.