Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 2 நாளில் 5,146 மனுக்கள் குவிந்தன

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 2 நாளில் 5,146 மனுக்கள் குவிந்தன

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 2 நாளில் 5,146 மனுக்கள் குவிந்தன

'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் 2 நாளில் 5,146 மனுக்கள் குவிந்தன

ADDED : ஜூலை 17, 2024 09:02 AM


Google News
சேலம் சேலம், கொங்கணாபுரம் அருகில் உள்ள வெள்ளாளபுரம் சமுதாய கூடத்தில் நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, நேற்று கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்தார். பின் அவர் கூறியதாவது:

மக்களுடன் முதல்வர் திட்டத்தில், சேலம் மாவட்டத்தில், 20 ஒன்றியங்களில், 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் ஆக., 6 வரை, 92 முகாம்கள் நடக்கின்றன. கடந்த, 11, 15ல் நடந்த முகாம்கள் மூலம், மக்களிடம் பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 5,146 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

அனைத்து மனுக்கள் மீதும், 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம்களை சிறப்பாக நடத்த கண்காணிப்பு அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் நியமிக்-கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us