ஜோ.பேட்டை-ஈரோடுரயில் இன்று தாமதம்
ஜோ.பேட்டை-ஈரோடுரயில் இன்று தாமதம்
ஜோ.பேட்டை-ஈரோடுரயில் இன்று தாமதம்
ADDED : மார் 25, 2025 01:10 AM
ஜோ.பேட்டை-ஈரோடுரயில் இன்று தாமதம்
சேலம்:சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜோலார்பேட்டை - திருப்பத்துார் இடையே வழித்தட பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. மார்ச் 25, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை - ஈரோடு பயணிகள் ரயில், 45 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.
மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சிகண்துடைப்புக்கு நடத்தப்படும் முத்தரப்பு கூட்டம் என புகார்
ஆத்துார்:மரவள்ளி கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பாக முத்தரப்பு கூட்டம் நடத்தியும் பலன் இல்லை என விவசாயிகள் குற்றம்
சாட்டியுள்ளனர்.சேலம் மாவட்டம், ஆத்துார், தலைவாசல், கல்வராயன்மலை பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக மரவள்ளி சாகுபடி உள்ளது. கடந்த, 2023ல், நடவு செய்த மரவள்ளி, 2024 ஜனவரியில் அறுடையின்போது, ஒரு மூட்டை கிழங்கு (75 கிலோ), 700 முதல், 800 ரூபாய் விலை போனது. அதை நம்பி, 2024ல், ஆத்துார், கல்வராயன் மலை பகுதி விவசாயிகள், அதிகளவில் மரவள்ளி கிழங்கை பயிரிட்ட நிலையில், தற்போது மூட்டை, 350 முதல், 450 ரூபாய் என விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து, ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அ.சங்கரய்யா கூறியதாவது: கடந்த பிப்., 5ல், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மரவள்ளி விவசாயிகள், சேகோ ஆலை மற்றும் சேகோ சர்வ் என, முத்தரப்பு கூட்டம்
நடந்தது. இக்கூட்டத்தில், மாவுச்சத்துக்கு ஏற்ப (டன் பாய்ன்ட் 28 அளவுக்கு), 300 ரூபாய் விலை நிர்ணயம் செய்யும்போது, ஒரு மூட்டைக்கு, 600 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால், மாவுச்சத்துக்கு, 200 முதல் 220 ரூபாய் என, மூட்டைக்கு (75 கிலோ), 350 முதல், 400 ரூபாய் அளவில்தான், சேகோ ஆலையினர் விலை வழங்குகின்றனர்.
முத்தரப்பு கூட்டத்திற்கு பின், மேலும் விலை குறைத்தது குறித்து கலெக்டரிடம் கூறியும் பலனில்லை. இந்த முத்தரப்பு கூட்டம், 'கண்துடைப்பு'க்கு தான் அதிகாரிகள் நடத்துகின்றனர்.
கடந்த மார்ச் 20ல், முதல்வர் ஸ்டாலினை, 25 விவசாயிகள் சங்கத்தினர் சந்திக்க சென்றோம். முதல்வரிடம் மனு கொடுக்க சென்றபோது, கோரிக்கை மனுக்களை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வாங்கிக் கொண்டனர். 'சால்வை, புத்தகம் மட்டுமே உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தனர். முதல்வருக்கு, வேளாண் பட்ஜெட்டிற்கு நன்றி மட்டுமே தெரிவிக்க வேண்டும். வேறு எந்த கோரிக்கை தொடர்பாகவும் முதல்வரிடம் பேசக்கூடாது' என, தெரிவித்து தான், முதல்வரை சந்திக்க விவசாய சங்கத்தினரை அனுமதித்தனர்.
இவ்வாறு கூறினார்.இதுகுறித்து, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், 'கடந்தாண்டு ஜவ்வரிசி மூட்டை (90 கிலோ), 5,000 ரூபாய், ஸ்டார்ச் மூட்டை, 3,500 ரூபாய் இருந்தது. இதனால் மரவள்ளி கிழங்கு, மூட்டை, 700 முதல், 800 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஜவ்வரிசி மூட்டை 3,200 ரூபாய், ஸ்டார்ச் 2,300 ரூபாயாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மூட்டைக்கு, 300 முதல், 500 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஜவ்வரிசி விலைக்கு ஏற்ப, மரவள்ளி கிழங்கு விலை இருக்கும். தற்போது, 28 டன் பாயின்ட்டுக்கு, 210 முதல், 220 ரூபாய் என, ஒரு மூட்டை கிழங்கு, 430 முதல், 450 ரூபாய் உள்ளது. மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது' என்றனர்.